2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

Photo of author

By Rupa

2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

Rupa

2026 elections must be between DMK and Wood. Anbumani against father!!

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் பாமகவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பாமகவில் அப்பா மகன் இருவருக்குமிடையே இருந்த சண்டையால் கட்சியில் மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆரம்ப கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் இதனை சமாளித்து வந்த நிலையில் இறுதியில் நானே தலைவர் அன்புமணி கிடையாது என்று அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார்.

இதற்கு பின்னணி நோக்கம் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே பாஜக உடன் கூட்டணி வைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் பாஜக கூட்டணிய வேண்டாம் அதிமுக வேண்டாம் என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளாராம். மேற்கொண்டு மீண்டும் திமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மற்றொரு பக்கம் அன்புமணி அவரது அப்பாவின் யோசனைக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார். இவரின் எம்பி பதவி காலமானது முடிவடையுள்ள நிலையில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தால்தான் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எண்ணுகிறாராம். இதனால் இவர்களுக்குள் மோதல் போக்கு இருந்து வருவதாக கூறுகின்றனர். அதிமுக இரண்டாக உடைந்தது போல் பாமகவும் சிதற அதிக வாய்ப்புள்ளது. பாஜகவிற்கு அன்புமணியும் திமுக விற்கு ராமதாஸும் இருவேறு திசைகளில் காலூன்ற இருப்பதாக கூறுகின்றனர்.