Breaking News, Politics, State

2026-ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி தான்.. அதிகாரத்தில் கட்டாயம் பங்கு- தவெக தலைவர் விஜய்!!

Photo of author

By Rupa

TVK: தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடானது இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இதில் விஜய் கட்சியின் கொள்கை உள்ளிட்டவைகள் குறித்தும் கூட்டணி ஆட்சி மேலும் நமக்கு எதிரானவர்கள் என்பது குறித்து வெளியிட்டார்.அதில் ஆளும் அரசியல் குடும்ப அரசியல் தான் மிகப்பெரிய எதிரி என்று குறிப்பிட்டார்.மேலும் கூட்டணி ஆட்சி குறித்து அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

அதில் நம்மை நம்பி வருபவர்களை ஆதரித்து தான் பழக்கம்,கட்டாயம் 2026 கூட்டணி ஆட்சி அதுமட்டுமின்றி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு உண்டு என்று கூறினார்.வரும் 2026 சட்டமென்ற தேர்தலில் கட்டாயம் கூட்டணி ஆட்சி அமையும் அதே சமயம் தற்போதுள்ள ஆளும் திமுக-வுடன் கட்டாயம் இல்லை என்றும் மேலும் பாஜக வுடன் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

 

நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு எதிரான அரசியல்!! எதிரியை உடைத்த விஜய்!!!

தினமும் இந்த பொருளில் டீ செய்து குடித்தால்.. உங்களுக்கு வாழ்நாளில் கேன்சர் வராது!!