TVK: அதிமுக பாஜக மீண்டும் இணைந்த நிலையில் விஜய் கூட்டணியின்றி தவித்து வருகிறாராம். நாம் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் நமது செல்வாக்கை பார்த்து பல கட்சிகள் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கும் என்ற தப்பு கணக்கை விஜய் போட்டு விட்டதாக பல நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர் திருச்சியில் மாநாடு நடத்தி கட்சிய ரீதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிகப்பு கம்பளம் விரித்து பல கட்சிகள் கூட்டணி வைத்து முயற்சித்தது உண்மைதான்.
அந்த வரிசையில் அதிமுக நாம் தமிழர் பாமக உள்ளிட்ட பலர் அடங்குவர். ஆனால் இவருடன் இருந்த சக நிர்வாகிகள் இவரை குழப்பத்தில் ஆழ்த்தியதால் கூட்டணி பேச்சு வார்த்தை சரிவராமலே போனது. தற்சமயம் பாஜகவுடன் அதிமுக இணைந்த நிலையில், பெரிய கட்சி கூட்டணியின்றி புலம்பி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளை உடைக்கலாம் என்ற திட்டமும் தவிடு பொடியாகிவிட்டது. இதனால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை தனி பெரும்பான்மையுடன் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறுகின்றனர்.
உடனிருக்கும் நிர்வாகிகள் தேர்தல் இருக்கும் சமயத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறி வருகிறார்களாம். அதேபோல கட்சியில் விஜய் தவிர்த்து குறிப்பிட்ட சில நிர்வாகிகள் மட்டும்தான் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேற்கொண்டு பெரும்வாரியான நிர்வாகிகள் யாரென்று கூட தெரியாதாம். இதனால் கால அவகாசம் எடுத்து இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தலை கூட சந்திக்கலாம் என்ற யோசனையில் உள்ளதாக கூறுகின்றனர். பெரும் செல்வாக்கு பெற்ற கட்சியின் கூட்டணி கிடைக்காத பட்சத்தில் விஜய் இப்படியான முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாம்.