21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்

0
159

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங், வயது 21,. ராஜஸ்தான் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்தவுடன் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கூடிய விரைவில் அவருக்கு நீதிபதி பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது குறித்து இளம் நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள மயங்க் பிரதாப் சிங் கூறிய போது, “நீதிபதிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கண்டு நீதித்துறை சேவை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என்று தெரிவித்தார்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது முன்பு 23 ஆக நிர்ணயித்தது. இதனை ராஜஸ்தான் அரசு இந்த ஆண்டு முதல் 21 வயதாக குறைத்தது. இதன் மூலம் துடிப்பான மாணவர்கள் இளம்‌ வயதில் உயர்ந்த கவுரவத்தை பெற வழி வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி
Next article’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்