மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்! இப்படியும் நடக்குமா?

Photo of author

By Anand

மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்! இப்படியும் நடக்குமா?

Anand

Updated on:

மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்! இப்படியும் நடக்குமா?

திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணமகன் காதலியுடன் ஓடியதால் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண் தனக்கு மாமனாராக வர வேண்டியவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்திலுள்ள சமஷ்டிபூரில் வசித்து வருபவர் தான் ரோஷன் லால் (65). இவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுருந்தார்.அந்தவகையில் அவருக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் திருமண நடக்கவிருக்கும் அந்த சமயத்தில் மணமகன் தான் காதலித்து வந்த பெண்ணுடன் ஓடிபோய்விட்டார்.

இதனையறிந்த இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்துள்ளனர்.இந்நிலையில் தான் பெண்ணின் தந்தை தன்னுடைய குடும்ப கௌரவம் போய்விடக்கூடாது என அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

அதாவது தன்னுடைய பெண்ணுக்கு மாமனாராக வேண்டியவரையே மணமகனாக அறிவித்து அவரையே திருமணம் செய்து வைத்துள்ளார்.21 வயதாகும் அந்த பெண்ணும் பெற்றோர் முடிவு செய்தது போலவே 65 வயதாகும் மாமனார் ரோஷனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.