சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது.
இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், ஆய்வுசெய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள்,செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார். சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டன. இதுவரை அதற்கு ஒரு தொகையும் வரவில்லை. இவையெல்லாம் ஆதாரத்துடன் எங்களிடம் உள்ளது. அதன் மேல் நடவடிக்கை எடுப்போம், விடமாட்டோம் என்றும் கூறினார்.
ஆவின் நிறுவனத்தில் இருந்து போனதற்கு அனைத்து ரசீதுகளும் உள்ளன. பணம் எதுவும் வரவில்லை என்பதற்கான உண்மை நிலையும் வைத்திருக்கின்றோம் வெளியே போனதற்கு மட்டுமே ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடான பணி நியமனம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் இந்த ஆட்சியின் மூலம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.