மேகாதாது அணை விவகாரம்.. தமிழகத்திற்கு மிகவும் நல்லது!! உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்வர் திடீர் சந்திப்பு!!

Photo of author

By Rupa

Mekedatu Dam: கர்நாடக துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததோடு மேகதாது அணை கட்டுவது குறித்து பேட்டியளித்துள்ளார்.

கர்நாடக அரசானது மேகதாது அணை கட்டுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் நிலவி வந்தது. இம்முறை கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு காரணமாகவும் காவேரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின் படியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தந்துள்ளார்.

நமது தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மையானது மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்து கர்நாடகாவிலிருக்கும் திடக்கழிவு மேலாண்மையை தரம் உயர்த்த வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தொழிற்சாலையை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் கலந்தோசித்து பல விவரங்களையும் கேட்டறிந்தார். மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பொழுது, மேகதாது அணை கட்டுவது எங்களின் நன்மைக்காக அல்ல தமிழ்நாட்டிற்கு தான் மிகவும் உதவும்.

தற்பொழுது தமிழக முதல்வர் சென்னையில் இல்லை அவருக்கு பதில் யார் உள்ளார்களோ அவரை சந்திக்க உள்ளேன். முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்ல நண்பர். இவ்வாறு தெரிவித்து விட்டு தலைமை அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார்.