23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

0
228
23 female students accused of sex!! Government doctor suspended!!
23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 ஆசிரியர்கள் என அனைவரும் சேர்ந்து எழுத்து பூர்வமாக புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை பற்றி விசாகா கமிட்டி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டது. அப்போது ஆப்பரேசன் தியேட்டரில் இருக்கும் போது பாலியல் ரீதியான பேச்சுக்களும், தொட்டு தொட்டு பேசவதுமாக இருந்து இருக்கிறார்.

பேசும் போது முககவசத்தை கழட்டி விட்டு தான் பேச சொல்வார். அப்படி இல்லையென்றால் அவரே அதை கழட்டி விடுவார். மாணவிகளை நிறத்தை வைத்து கேலி பேசியுள்ளார். பின்னாலிருந்து தலைமுடியை இழுப்பார். உன் கூந்தல் அழகாக உள்ளது, நீ அழகாக இருக்கிறாய் என்றெல்லாம் பேசியுள்ளார் என எழுத்து பூர்வமாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் மாணவிகளிடம் மட்டுமல்லாது அங்கு வரும் மற்றவர்களிடமும் அத்து மீறி இருக்கிறார்.ஒரு மருத்துவர் போல அவர் நடந்து கொள்ள வில்லை என அனைவரும் கூறியுள்ளனர்.

Previous articleஇன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!
Next articleதளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!!