சிறார் நீதி வாரியம்: மாநில அரசால், “குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், 2015” கீழ் உருவாக்கப்பட்ட ஓர் வாரியம் ஆகும். ஒரு சிறார் நீதி வாரியமானது, ஒரு முதல் தர “நீதித்துறை மாஜிஸ்திரேட்” மற்றும் இரண்டு “சமூக சேவகர்கள்” கொண்டு செயல்படுகிறது, இதில் “ஒருவர் பெண்” என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சிறார்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உள்ள சட்ட நடவடிக்கைகளில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்நிலையில் சிறார் நீதி வாரியம் “புதிய வேலைவாய்ப்பு” பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “விருதுநகர் மாவட்ட” சிறார் நீதி வாரியம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் “Chairperson மற்றும் Member” பணிகளுக்கான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்காக “5 பணியிடங்களை” , காலி பணியிடங்கள் அறிவித்து அதற்கான பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஊதியம், தேர்வு முறை, விண்ணப்பம் செய்யும் முறை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் கல்வி நிறுவங்களில் “B.Sc, BA, BL” ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிப்பவர்கள் வயது, “35 வயது முதல் அதிகபட்சமாக 65 வயது வரை” இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : மாவட்ட சிறார் நீதி வாரியத்தின் “விதிகளின் அடிப்படையில்” மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: “நேர்காணல்” மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: மாவட்ட சிறார் நீதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் “06.12.2024” தேதிக்குள், அதிகாரப்பூர்வமான மாவட்ட சிறார் நீதி வாரியத்தின் முகவரிக்கு அனுப்பவேண்டும். 06.12.2024 தேதிக்கு பின் அனுப்பப்படும் எந்த ஒரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படும்.