கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள உன்னைபுறா பகுதியைச் சேர்ந்த சிஎன்பிஜு குமார் என்பவர் கோழிப்பண்ணை வைக்கவிருக்கிறார்
இதற்காக ஹைபிரிட் ரக கோழிகளை அவர் வாங்கி வந்துள்ளார். அந்த கோழிகளை தற்போது வீட்டினருகே அடைத்து வைத்து பராமரித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில், அந்த கோழிகளில் ஒரு கோழி மிகவும் சோர்வாக இருந்திருக்கிறது. அதனை கவனித்த அதன் உரிமையாளர் கூட்டிலிருந்து அதனை எடுத்து தனியாக விட்டுள்ளார்.
இதன் பிறகு அந்த கோழி கால் தாங்கியபடி நடந்ததை கவனித்திருக்கிறார். இதனை தொடர்ந்து கால் வலிக்கு மருந்து தடவி இருக்கிறார்.
அதன்பிறகு அன்றைய தினமே காலை 8 மணி அளவில் ஆரம்பித்து மதியம் 2 மணி வரையில் தொடர்ச்சியாக முட்டைகளை இட்டு வந்திருக்கிறது. அந்த கோழி வழக்கமாக முட்டையிட்ட சற்று நேரத்தில் கூறி அந்த இடத்தை விட்டு சென்று விடும் ஆனால் அந்த கோழி மீண்டும் ஒரு முட்டை இட்டது.
அதன் உரிமையாளருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த செய்தியை அறிந்து அவருடைய வீட்டிற்கு பலரும் வருகை தந்து கோழியை பார்த்தார்கள் ஊர் மக்கள் கூடி இருக்க அவர்கள் முன்னிலையிலும் அந்த கோழி முட்டையிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பாக அறிந்துகொண்ட கால்நடை மருத்துவர்களும் கோழியை வந்து பார்வையிட்டிருக்கிறார்கள். அவர்கள் தவிக்கும்போது இது மிகவும் அரிதான விஷயம் அந்தக் கோழி தொடர்ச்சியாக முட்டையிட்டது ஏன் என்பதை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தால் மட்டுமே இதை நாம் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்கள்.
பல்வேறு காரணங்களால் உண்டான ஹார்மோன் கோளாறு காரணமாக, இது நடந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு ஒரே சமயத்தில் அதிக அளவிலான முட்டையிட்ட கோழிக்கு அதன் உடலிலிருந்து கால்சியம், புரதம் மற்றும் விட்டமின் உள்ளிட்ட சக்திகள் பெருமளவு குறைந்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.