மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

0
122

 

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…

 

மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அஜிலா மாகாணத்தின் முக்கியமான சாலையில் உள்ள வளைவில் திரும்பும் பொழுது மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் மினி பஸ்ஸில் பயணித்த 24 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளில் அதிக சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது.

 

மொராக்கோ நாட்டில் உள்ள பல ஏழை மக்கள் மினி பஸ்களையே பயணத்திற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர். மொராக்கோவில் வருடந்தோறும் சராசரியாக சாலை விபத்துகள் மூலமாக 3500 பேர் உயிர் இழப்பதாகவும் 12000 பேர் காயங்களால் பாதிக்கப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

Previous articleஎங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!
Next articleஉலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!