’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

0
155

’கோவிட் 19’ தாக்குதல்:ஒரே நாளில் 242 பேர் பலி! சீனாவில் மீண்டும் பதற்றம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ள நிலையில் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் சீனாவில் இந்த நோயால் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 97 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு கோவிட் 19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். இதை சீன அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் பீதி அதிகமாகியுள்ளது. இதனால் கோவிட் 19 நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது.

Previous articleதாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!
Next articleஆண்டவனே செய்தாலும் தவறு தவறுதான்! அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி..!!