25-8-2022 இந்தியாவின் இன்றைய நோய் தொற்று பாதிப்பு நிலவரம்!

Photo of author

By Sakthi

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,725 என பதிவாகியுள்ளது.

ஆகவே இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,43,78,920 என பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,084 என பதிவாகியுள்ளது. ஆகவே இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,37,57,385 என பதிவாகியுள்ளது. தற்போது இந்த நோய் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 94,047 என பதிவாகியுள்ளது.

ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவரின் இன்றைய எண்ணிக்கை 36 என பதிவாகியுள்ளது. ஆகவே உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,27,448 என அதிகரித்தது நாட்டில் இதுவரையில் 210.82 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.