
PMK: பாமக கட்சியைக்குள் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் தற்போது ராமதாஸ் இருந்தாலும் அதனை அன்புமணி இருக்கவில்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணி இருவரும் தனி தனி நிர்வாகிகளை அமர்த்தியும் அதனை மற்றொருவர் நீக்கியும் வருகின்றனர். இதனால் கட்சியில் உள்ள பொறுப்புகளுக்கு யார் தான் நிர்வாகி என்ற குழப்பம் எழுந்துள்ளது.
அதாவது ராமதாஸ் நிர்வகிக்கும் நிர்வாகி செயல்படுவாரா அல்லது அன்புமணி நியமனம் செய்யும் நிர்வாகி செயல்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் ராமதாஸ் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அவரது மூத்த மகள் காந்திமதியும் கலந்து கொண்டார். இவ்வாறு அவர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வைத்து பொறுப்பு ஏதாவது வழங்கப் போகிறாரா என்று கேள்வியை செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் கூறியதாவது, தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டில் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்ததும் பெண்கள் தான். அந்த வகையில் காந்திமதிக்கு தற்போது வரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறிவிட்டு, போகப்போக தெரியும் என்று பாடலை பாடினார். இதற்குப் பின்னால் கட்டாயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்பது தெரிகிறது.
அன்புமணியின் மனைவிக்கு எதிராக தனது மகளை களத்தில் இறக்க ராமதாஸ் தயார் செய்வதாகவும் வரப்போகும் தேர்தலில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.