டிசம்பர் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது.தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துவின் பிறப்பை கூறும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 25 ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களும் மற்றவர்களும் பரிசுகளை பரிமாறி கொள்வது வழக்கம்.
இந்நிலையில் மேற்கு வங்காள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26 ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி மாநில அரசு அலுவலகங்கள் ,உள்ளாட்சி அமைப்புகள் ,சட்டப்பூர்வ அமைப்புகள் ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள் ,கல்வி நிறுவனங்கள் ,பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு வரும் டிசம்பர் 26 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.