பிரபல நடிகையை பற்றி ஆபாசமாக பதிவிட்ட 27 வயது இளைஞன் கைது!!

0
202

சமூக வலைத்தளங்களில் பாலிவுட் நடிகையும், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்‌ஷி சின்ஹா குறித்து, ஆபாசமாக பதிவிட்ட 27 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது  செய்தனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து வாரிசு நடிகர்கள் மீது சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசக் கருத்துகளும், அவதூறு பதிவுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் பதிவிட்ட வீடியோவிற்கு கீழே மிகவும் தரக்குறைவான சொற்களால் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து கடந்த ஏழாம் தேதி சோனாக்‌ஷி சின்ஹா புகாரளித்திருந்த நிலையில், அந்நபரை மும்பை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.மும்பையை சேர்ந்த  ஜாதவ் என்பவர் என்றும் அவர் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

சமூகவலைதளங்களில் பயனுள்ள வகையில் பயன்படுத்தி யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் பதிவிட்டால் போதும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஇளைஞர்களை அலறவிடும் நடிகை சாக்ஸி!
Next articleவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here