போர்னோ டேட்டிங்கில் ஆர்வம் காட்டும் 2K கிட்ஸ்கள்…. அதிரவைக்கும் தகவல்..!!
தனியாக இருக்கும் நபர்கள் தங்களுக்கென ஒரு துணையை தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலிகள் தான் டேட்டிங் செயலிகள். ஆரம்பத்தில் இவைகள் மீது யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்த டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.
அந்த வகையில் பம்பிள், டிண்டர், ஹாப்பன் போன்ற டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக உச்சம் தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் பயனர்கள் எண்ணிக்கை 128% உயர்ந்துள்ளதாம். அதுமட்டுமின்றி தினசரி இதை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் 125% உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலும் 2கே கிட்ஸ்கள் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள 2கே கிட்ஸ்கள் போர்னோ டேட்டிங் எனப்படும் புதிய கலாச்சாரத்திற்கு மாறி வருகிறார்களாம்.
அதாவது இரண்டு பேர் தொடர்ந்து டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றால், அவர்கள் இருவரும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விதமாக அவர்களின் பாலியல் விருப்பங்களை அறிந்துகொள்ள இருவரும் ஒன்றாக 18+ படங்களை பார்த்து அவரவர் விருப்பத்தை புரிந்து கொள்வதுதான் போர்னோ டேட்டிங்.
தற்போது இந்த வகை டேட்டிங் மீதுதான் 2கே கிட்ஸ்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை நம் நாட்டின் கலாச்சார சீரழிவாகவே கருதுகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினரின் புதிய கலாச்சாரங்கள் முகம் சுளிக்க வைக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.