உள்ளாட்சித் தேர்தல்! இரண்டாவது நாளாக தொடரும் ஆலோசனை கூட்டம்!

Photo of author

By Sakthi

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில், இன்றைய தினமும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஊராட்சி மற்றும் நகராட்சி என்ற இருவகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன .பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அண்மையில் தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பை அளித்தது.

இதன் அடிப்படையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேற்று 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்,7 உள்ளாட்சித் தேர்தல் குறித்து இரண்டாவது தினமாக மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,தென்காசி திருநெல்வேலி, ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் சிக்கி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை உட்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பங்கேற்று இருக்கின்றார்.