ஊரடங்கிற்கு பிறகு இயக்குனராக 2வது படம்! எப்போது தொடங்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Photo of author

By Parthipan K

நடிகர்  தனுஷ் இயக்குனராக தனது 2 வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகன், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என சினிமா திரையுலகில் பன்முகங்களை கொண்ட ஒருவர் என்றால் அது நடிகர் தனுஷ்தான். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் ஏன் ஹாலிவுட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார்.

இவருக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும், அவ்வப்போது எழுந்து வரும். அதன் ஒரு பகுதியாக பவர் பாண்டி என்ற படத்தினை முதன்முதலாக இயக்கி அதில் சூப்பர் ஹிட் கொடுத்தார். மீண்டும் மற்றொரு படம் எடுக்கப் போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. அந்த படத்திற்கு நான் ருத்ரன் என்று பெயர் வைக்கப்பட்டது.

ஓரிரு காரணங்களாலும், பண பிரச்சனைகளாலும் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பல ஷூட்டிங்கள் தள்ளிப்போட , சிலர் முற்றிலுமாக நிறுத்த இந்த முறை படத்தை இயக்க நேரம் கிடைத்ததால் மீண்டும் இந்த படத்தை இயக்கும் பணியில் தனுஷ் ஈடுபடப் போகிறார் என்று அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் பிரபல நடிகரான நாகார்ஜுனா , சரத்குமார், SJ சூர்யா, ஸ்ரீகாந்த் , அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.