2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் தொல்லியல் ஆராய்ச்சி பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.அவ்வாராய்ச்சியில் கண்ணாடி மணிகள்,வட்ட சில்லுகள்,இரும்பாலான முத்திரைகள்,2 தங்க அணிகலன்கள் கிடைக்கபெற்றுள்ளது
இரண்டாம் கட்ட பணி நிறைவு:
இந்நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது இந்நிலையில் இப்பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது இந்த அகழாய்வில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளாவன,கண்ணாடி மணிகள்,கண்ணாடி வளையல் துண்டுகள்,சுடுமண் பொம்மைகள்,சூதுபவள மணிகள்,இரும்பு மற்றும் தங்க அணிகலன்கள்,குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள்,தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.
இக்கண்டுபிடிப்புகளில் முக்கியமானது மூன்று எழுத்து பொறிப்பு குறிப்புகளுடன் கிடைக்கப்பெற்ற ஒரு பானையாகும்.இக்கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும் இந்தப் பானை ஓடுகள் நடுவே“மத்தி” என்றும் “த” மற்றும் “ரேஸ” என்ற எழுத்துக்கள் கொண்ட இரண்டு பானையோடுகள் கிடைத்துள்ளன.
ஆய்வறிக்கை:
தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:
காளிமுத்து அவர்கள் இதுவரை வடக்கு தமிழகமான காஞ்சிபுரம், மற்றும் பட்டரைப்பெருந்தூரில் மட்டுமே தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.ஆனால் வடக்குப்பட்டில் எழுத்து பொறிப்புடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்திருப்பது மிகவும் ஒரு அரிய கண்டுபிடிப்பாகும்.இவற்றின் காலம் சுமார் கிமு முதலாம் நூற்றாண்டாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்லவர் மற்றும் சோழர் கால காசுகளும் கண்டறியப்பட்டுள்ளன.தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டறிக்கப்பட்ட அனைத்து தொல்பொருட்களும் தொல்லியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அகழாய்வறிக்கை தயாரிக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.