இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! ஏமாற்றம் அளித்த கோலி!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

இன்று 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்து நடந்து வருகின்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரண்டு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, மற்றும் ஷாபாஸ் நதீம் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், ஆகியோர் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மொயின் அலி ஸ்டுவர்ட் பிரட் ஒல்லிஸ்டோன், ஆகியோர் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்தது ஆட்டம். தொடக்க வீரர் கில் அவர் எதிர்கொண்ட 3-வது பந்தில் அவுட் ஆனார் அதற்கடுத்து வந்த புஜாரா 21 ரன்னில் சிறிது இடைவெளி விட்டு தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். அதன்பிறகு அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார் நிச்சயமாக ஒரு பெரிய ரன்னை சேர்ப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஆனாலும் அவர் தன்னுடைய ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார். மொயின் அலியின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பிவிட்டார்.

தற்போது வரையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து இருக்கிறது. ரோகித் சர்மா 148 ரன்னுடனும் அஜிங்கியா ரஹானே 56 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.