இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்! 

Photo of author

By Amutha

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி! டேவிட் வார்னர் விலகல்! 

டெல்லியில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விலகி உள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை எடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி சிறப்பாக விளையாடிய 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் டேவிட் வார்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது முகமது சிராஜ் வீசிய பந்து அவரது ஹெல்மெட் மற்றும் முதுகு பகுதியை பதம் பார்த்தது. தொடர்ச்சியாக முதுகுப்பகுதி மற்றும் ஹெல்மெட்களில் அடிவாங்கிக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து அதிவேகமாக சென்ற பந்து அவரின் தலையை பதம் பார்த்தது. அவர் சிறிது நேரம் தலைசுற்றி நின்றார். அவருக்கு எந்தவித மருத்துவ பரிசோதனையும் செய்யாத நிலையில் இந்தியா இன்னிங்ஸின் போது அவர் ஃபீல்டிங்கிற்கே வரவில்லை. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வார்னர் விலகியுள்ளதால் அவருக்கு பதில் இரண்டாவது இன்னிங்ஸில் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நாக்பூர் டெஸ்டிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.