சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

0
139

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இமாச்சல் பிரதேசம் மணலி -லே தேசிய நெடுஞ்சாலையில் 9.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதையானது, மலைகளின் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப்பாதை அமைக்க ரூபாய் .3300 கோடியை செலவிடப்பட்டு ,வாஜ்பாய் நினைவாக அடல் என்று பெயரிடப்பட்டது.

இந்த பாதையின் மூலம் மணலி – லே ஆகிய பகுதிகளின் இடையே 46 கிலோமீட்டர் தூரம் குறையும் என்றும், பயண நேரத்தில் 4 முதல் 5 மணி நேரம் குறைவு என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டு 72 மணி நேரத்திற்கு உள்ளேயே 3 விபத்துக்கள் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் தலைமை பொறியாளர் புருஷோத்தமன் கூறுகையில், “சுரங்கப்பாதை ஒழுங்குபடுத்துவது குறித்து ஆலோசனைகளை உள்ளூர் நிர்வாகத்திற்கு கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தகவல் அளிக்கப்பட்டு இருந்தும், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற தன்மையே முக்கிய காரணம் “என்று கூறியுள்ளார்.

மேலும் ,வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றாமல் நடுரோட்டிலேயே செல் போன் பேசி இருந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதனையும் கூறியுள்ளார். மேலும், இந்த சுரங்க பாதையில் இரு வழிப்பாதையை அமைக்கப்பட்டிருப்பதால் முந்தி செல்ல அனுமதிக்க இயலாத ஒன்று என்று கூறினார். தீப்பற்றக்கூடிய பெட்ரோல் சிலிண்டர்கள் மற்றும் எரிவாயு லாரிகளை இப்பாதையில் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

மேலும் இந்தப் பாதைகளை பராமரிப்பது குறித்து தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் மூடப்படுவதாக தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.

Previous articleஎந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!
Next articleகள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!