மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேர் கைது! அதிரடி காட்டிய போலீஸ்!
பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா ஜாதவ். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வங்கி கணக்கு காலாவதி ஆகி விட்டதாக கூறி, அந்த வங்கி கணக்கை புதுப்பிக்கும்படியும், மர்ம நபர்கள் சிலர் கடந்த மாதம் இவருக்கு தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். அவரும் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணைப் பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மர்மநபர்கள் மோசடி செய்தனர்.
இவ்வாறு 102 முறை மர்ம நபர்களுக்கு தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை எல்லாம் சொல்லி இருந்ததால், அவரது வங்கி கணக்கில் இருந்து 10 லட்சத்தையும் அவர்கள் எடுத்து மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி எல்லப்பா ஜாதவ் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எல்லா எல்லப்பா ஜாதவ் உள்ளிட்ட ஏராளமான நபர்களிடமும், இதேபோன்று மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேரை ஜார்க்கண்டில் வைத்து கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் பிரசாத் 30 வயதானவர், அவரது மனைவி உஷாதேவி 25 வயதானவர், மற்றும் இவர்களுக்கு உதவிய மராட்டிய மாநிலம் நாசிக்கில் சேர்ந்த அன்பர் ஷேக் 24 வயதானவர் என்பதும் தெரிந்தது.
அவர்கள் 3 பேரும் சைபர் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அதாவது பெங்களூர் உட்பட கர்நாடகா மாநிலம் முழுவதிலும் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் காலாவதி ஆகிவிட்டது என்று கூறி அதனை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறி ஏராளமான பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல லட்சத்தை எடுத்து மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் இதையே தொழிலாக செய்து இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 304 செல்போன்கள், 408 சிம்கார்டுகள், 3 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களது 50 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. அந்த வங்கி கணக்குகளில் 12 லட்சத்து 60 ஆயிரம் இருந்தும் கணக்கில் தெரிந்தது.
அதனை போலீசார் முடக்கியுள்ளனர். கைதான 3 பேர் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரையும் பெலகாவிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாவட்ட போலீஸ் கமிஷனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.