நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0
172
3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!
3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வருவாய் துறை 2022 இல் முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பிற்கான தாமதம் ஏற்ப்பட்டால் ஜூலை 1, 2022 முதல், தாமதக் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயரும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளிலும் 1 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதான விற்பனை ஊக்குவிப்பு மூலம் பெறப்படும் பணப் பலன்கள் நாளை முதல் 10 சதவீத டிடிஎஸ் உயரும்.

பான்-ஆதார் இணைப்பிற்கான இருமடங்கு கட்டணம் வசூல்:
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 தேதி முதல் அபராத தொகை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 30ஆம் தேதிக்குள் இணைக்க விட்டால் 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பேன் கார்டு ஆதார் எண்ணை இணைப்பதற்கு. அதேசமயம் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சிகள் மீதான டிடிஎஸ்:

விரிச்சுவல் கரன்சிகளின் லாபத்தின் மீது 30% வரி விதியின் படி விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளுக்கான டிடிஎஸ் விலக்குகளுக்கான (TDS deductions) வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. வருமான வரி விதித்த பிறகு, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில், முதலீட்டாளரால் ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக 1 சதவீதம் வரி டிடிஎஸ் விதிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 1 முதல் கிரிப்டோகரன்சி வரி சுவல் டிஜிட்டல் சொத்துக்கள் மீதான வரி விலக்குகள் அமல்படுத்தப்படும். இதனால் ஒரு முதலீட்டாளர் இழப்புகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட டிடிஎஸ்-ஐத் திரும்பப் பெற முடியும்.

டாக்டர்கள், செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான ஐடி விதி மாற்றம்:

நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற நபர்கள் அவற்றைப் பெறுவதற்கு ஜூலை 1 முதல் வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமானத்துறை 2022 இல், வருமான வரிச் சட்டம் 1961 இல் மத்திய அரசு ஒரு புதிய பிரிவு 194R-ஐ கொண்டுவந்துள்ளது.  இதன்படி, பலன்களைப் பெறுபவர்கள் 10 சதவீத விகிதத்தில் TDS செலுத்த வேண்டும். இருப்பினும், ஒரே நிதியாண்டில் விலை ரூ.20,000 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே டிடிஎஸ் பொருந்தும்.

Previous articleஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!
Next articleபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எச்சரிக்கை! அப்பகுதியில் பரபரப்பு!