24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Photo of author

By Amutha

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

நமது நாட்டின் அருகில் உள்ள நாடான மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்து உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டு மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்பட பல நாடுகள் நிலநடுக்க பீதியில் உள்ளன. இந்த சூழ்நிலையில் நமது அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதுவும் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்டு உள்ளன.  அதன்படி மியான்மரின் யாங்கன் நகரில் முதன் முதலில் நிலநடுக்கம் உணரப்பட்டது . முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 11.56 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இது சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அடுத்து இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கம் 3 மணி நேரத்திற்கு பின்னர் அதாவது 2.53 மணி அளவில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டது.

அடுத்ததாக யாங்கன் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ரிக்டராக அளவுகோலில் பதிவானது. இது காலை 5.43 மணி அளவில் உணரப்பட்டது. சுமார் இது கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கமாகும். இந்த தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.

எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இதுப்பற்றிய தகவல்கள் வெளிவந்த பின்னரே சேதம் குறித்த தகவல் தெரியவரும்.