நேபாளத்தில் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Photo of author

By Parthipan K

நேபாளத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

நேபாளத்தில் பாக்லுங் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டது, மேலும்  குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5.3 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது.

நேபாளம் மலை பிரதேசம் என்பதால் நிலை ஸ்திரத்தன்மை காரணமாக சீர்குலையும் அபாயம் கொண்டதாக உள்ளது, நேபாள நாட்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த  காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் நிலநடுக்கத்தின்  நில அதிர்வு அலைகளை  பிரதிபலிக்கும் விதமாகவும் மற்றும் தீவிரப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

நள்ளிரவில் எற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர், மேலும் வீடுகளை விட்டு வீதியில் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர், இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் பலி பொருட்  சேதம் ஏற்ப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த நேபாள நாட்டில் எற்பட்ட நிலநடுக்கம் வட இந்திய மாநிலக்களான உத்தரகாண்ட் மாநிலத்திலும்  உணரப்பட்டது, மேலும் தலைநகரான டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேபாளம் மலை பிரதேசம் என்பதால் இங்கு நிலநடுக்கம் வருவது தொடர்ச்சியாக இருக்கிறது.