உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது.
இதனை அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் வன்மையாக கண்டித்தனர். இந்தியா சார்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் ரஷ்யா இதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.
ரஷ்யா, உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.மறுபுறம் ரஷ்ய படைகள் தன்னுடைய தீவிர தாக்குதல் காரணமாக, உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆகவே தற்சமயம் ரஷிய படைகள் உக்ரைனின் தலைநகரை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றன. இந்தப் போர் 20ஆவது நாளை நெருங்கி நடைபெற்றுவருகிறது. ரஷ்யப் படைகளின் தலைநகரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அங்கே குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், உள்ளிட்டவை மேலும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகரில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடுமையான போர் பதற்றம் நிலவி வருகின்ற சூழ்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பைச் சார்ந்த போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.
அங்கே போர் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு தொடர்பான அபாயம் நீடித்து வருகின்ற சூழ்நிலையிலும் 3 தலைவர்களும் பல மணி நேரம் ரயில் பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. இந்த பயணம் பல நாட்களாக திட்டமிடப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற போர் காரணமாக, உலகம் அதன் பாதுகாப்பு உணர்வை இழந்து விட்டது எனவும், அப்பாவி மக்கள் பலியாகிறார்கள், உடமைகள் அனைத்தையும் இழந்து வருகிறார்கள் என்றும், அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த போரை நிறுத்த வேண்டும் அதன் காரணமாக தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் 3 பேரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்களா? என்று விவரம் எதுவும் தெரியவில்லை. ஐரோப்பியத் தலைவர்களின் இந்த பயணம் மூலமாக உக்ரைனுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் வலுவான ஆதரவு வெளிப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.