தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

Photo of author

By Vijay

தீவிர பயிற்சியில் 3 முக்கிய வீரர்கள்.. அணியில் யாருக்கு இடம்? புதிய சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணி!!

நடந்து முடிந்த டி-20 உலக கோப்பையில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்து ஜிம்பபாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் 232/2 என்று மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அபிஷேக் ஷர்மா தனது அதிரடி ஆட்டத்தால் 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 77 ரன்கள் குவித்தார். பின்னர் களம் இறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. தற்போது இந்த அணியில் துபே, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்ற 3 முக்கிய வீரர்கள் அணியில் சேர்க்கபட்டுள்ளனர். இவர்கள் பார்படாஸ்ல் நடந்த உலக கோப்பை போட்டியில் இடம் பிடித்தவர்கள். இதில் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குபவர் தற்போது அந்த இடத்தில அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடுகிறார் மேலும் சதம் விளாசியுள்ளார். மற்றும் சஞ்சு சாம்சன் 3 வது இடத்தில் களம் இறங்குபவர் அதில் ருதுராஜ் சிறப்பாக விளையாடுகிறார். பவர் ஹிட்டராக ரிங்கு சிங் அணியில் நன்றாக விளையாடுகிறார் இதனால் துபே விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அணியில் யாரை சேர்ப்பது நீக்குவது என்று குழப்பம் நீடிக்கிறது. இதனால் கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் லக்ஸ்மன் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் மூவரும் தீவிர வலைபயிற்சியில் இணைந்துள்ளனர் . மூன்றாவது போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.