இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள் டூவீலர் சாகசத்தால் பறிபோன 3 உயிர்கள்!!

Photo of author

By Vinoth

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24), சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று மாலை கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் ஒரு  பைக்கிலும், மூன்று பேர் ஒரு பைக்கிலும் ஏறிச்சென்றனர்.

இந்த பைக் சாகசங்களில் முன் வீலை தூக்குவது, சடன் பிரேக் அடிப்பது, அதிவேகமாக செல்வது என சாகசங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு டூ டூவீலர்களும் எதிரெதிரே வேகமாக வந்தன. அப்போது ஆதி சுஞ்சனகிரி மடத்தின் அருகே அதி வேகமாக வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதியது. இதில் சம்பவ இடத்தில் சேவாக் மற்றும் லிங்கேஷ் உயிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சஞ்சய், மோனிஷ், கேசவன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர் .

மருத்துவமனைக்கி கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் உயிழந்தனர். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியதுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.