3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள 37,554 அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள், பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களை ஈர்த்து வருகிறது. இலவச பாடப்புத்தகம், காலை சிற்றுண்டி, ஸ்கூல் பேக், ஷூ, என அனைத்து விதத்திலும் ஈர்த்து மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கிறது.

இதன் படி கடந்த 2021ம் ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தது. அதனால் ஆசிரியர்கள்  தேவைப்பட்ட பள்ளிகளுக்கு பொது தொகுப்பிலிருந்து 3000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது.

எனவே நியமிக்கப்பட்ட இந்த 3000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு காலம் அதாவது 18.5.2023 முதல் 17.5.2023 வரை  பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.  இந்நிலையில் இவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து, 3 மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப் படுவதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது சரி என்றாலும் தங்களுக்கு பணி உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும், அல்லது அரசு பணிகளுக்கு முயற்சிக்கும் பொது தங்களை முதல் விருப்பமாக வைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.