புல்லட் இரயில் பால கட்டுமான பணியில் வடமாநிலத்தவர் 3 பேர் பலி!!

Photo of author

By Vinoth

மும்பை முதல் ஆமதாபாத் வரை தற்போது புல்லட் இரயில் வழித்தடத்திற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் ஆனந்த் மாவட்டத்தில் வதோதரா நகரில் வசாத் கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் மாஹி ஆற்றயொட்டி தற்காலிக கூடாரம் அமைத்தனர்.

இந்த கூடாரம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட் மூலம் கட்டி எழுப்பப்பட்டது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடிரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த கூடாரத்தில் உணவு சாப்பிட சென்ற  4 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதனை அடுத்து இதைப்பற்றி தகவல் போலீஸ்க்கு கொடுக்கப்பட்டது. மேலும் போலீஸ் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் பணியாளர்கள் மீட்கக்பட்டது. அதில் சம்பவ இடத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஓருவர் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதில் மொத்தம் 3 பேர் பலியானார். மேலும் ஓருவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கக்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல் துறை வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகாளில் இருக்கின்றனா என தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் மற்ற தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.