பயங்கரவாதிகளின் அத்துமீறலால் 3 போலீசார் பலி

0
154

ஆப்கானிஸ்தானில் போலீஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தபோதிலும் தலீபான் பயங்கரவாதிகள் அரசுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடக்கு மாகாணமான பக்லானில் புல்-யு-குமாரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை மோட்டார் சைக்கிளில் வந்த தலீபான் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.5பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Previous articleமுழு ஊரடங்கு: இன்று முதல் குடும்ப அட்டைக்கான ரூ.1000 உங்கள் வீடு தேடி வரும்!
Next articleமத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி!