ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் என்பது கிரிக்கெட்டின் நீண்ட மற்றும் புகழ்பெற்ற விளையாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஜாம்பவான்களின் சாதனைகளை அங்கீகரிப்பதாகும். அவ்வாறு சிறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி இந்த பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டு இந்த அணியில் 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய முன்னால் இடது கை சுழற் பந்து வீச்சாளரான நீது டேவிட் , தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏ பி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலஸ்டர் குக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹால் ஆஃப் ஃபேம்-ல் இடம்பெற்ற இரண்டாம் பெண்மணி நீது டேவிட். முதலில் இடம்பெற்ற பெண் இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவது உண்மையிலேயே ஒரு மரியாதை, இது அவர்களின் தேசிய அணி ஜெர்சியை அணியும் எவருக்கும் கிடைக்கும் மிக உயர்ந்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன், என ஐசிசி அறிக்கையில் நீது டேவிட் கூறினார்.இவர் தற்போது இந்திய மகளிர் அணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் பெண் ஆவார்.
முன்னால் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டர் குக் சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி கொண்டிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். மிக முக்கியமான போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் சிறந்த மற்றும் புகழ் பெற்ற வீரர்களுக்கான பட்டியலில் இடம் பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று கூறினார்.
ஏ பி டி வில்லியர்ஸ் தனது சிறந்த பேட்டிங் மூலம் உலக கிரிக்கெட்டினை ஒளிர செய்தவர். அவரை ரசிகர்கள் 360 டிகிரி பிளேயர் என்று அழைப்பர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக 50,100 மற்றும் 150 ஆகிய சாதனைகளை படைத்துள்ளார் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனது பயிற்சியாளர் , துணை உதவியாளர் மற்றும் அணி வீரர்கள் ஆதரவு இன்றி நான் எதையும் சாதித்திருக்க மாட்டேன். ஐசிசி மற்றும் உலகெங்கிலும் உள்ள எனது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.