திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட்ட அதிரடி கட்டளை! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

0
159

தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 26 தினங்களே இருக்கின்ற நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணி கட்சிகளுடன் டி ஆர் பாலு தலைமையான தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மமக கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளுக்கும் மதிமுகவிற்கு 6 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் ஆதித்தமிழர் பேரவை அதோடு மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு இடமும் தரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் .இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திமுக சார்பில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் போன்றோர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகள் கொடுக்கப் படுவதாகவும், அந்த கட்சியை சார்ந்தவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரையில் அந்த கட்சி தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மீதம் இருக்கின்ற 174 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. திமுக சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

என்னதான் கூட்டணி பேரம் முடிந்து இருந்தாலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் சின்னங்கள் தொடர்பான வேலைகள் இன்னும் முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் திமுக சார்பாக அதன் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

தமிழகத்திலே பெரிய அளவில் பெயர் வாங்காத சிறிய கட்சிகள் அனைத்தையும் தங்களுடைய கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதற்கு அந்த கட்சியின் தலைமை முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .தமிழகத்திலே பெரிய அளவில் பேர் வாங்காத மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடடாள் அந்த சின்னத்தின் காரணமாக அந்த வேட்பாளர் அதிக ஓட்டு வாங்கவோ அல்லது வெற்றி பெறவும் சாத்தியம் இருக்கிறது என்று அந்த கட்சி கருதுவதாக தெரிந்திருக்கிறது.

இதே பாணியை தான் சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அந்த கட்சி பயன்படுத்தியது. திமுக கூட்டணியில் இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரவிக்குமார் போட்டியிட்டார் . அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.