இந்தியாவில் நடைபெறும் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!

0
126

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கிறது அதன் விபரம் வருமாறு’

இந்தியாவில் இரண்டு உலகக் கோப்பை உட்பட மூன்று தொடர்கள் நடைபெற இருக்கின்றன. பாகிஸ்தானில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது.

எதிர்வரும் 2024ம் வருடம் 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அதோடு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கை 2027 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்கா, அரேபியா, சிம்பாப்வே.

2028- 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, 2029 சாம்பியன்ஸ் டிராபி இந்தியா.

2030- 20 ஓவர் உலக கோப்பை போட்டி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, 2031 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியா, வங்காளதேசம்.

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி தொடர் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபல நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர்! அதுவும் இத்தனை வயது குறைவா?
Next articleசொன்னதை செய்வாரா முதலமைச்சர்? நக்கலாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!