சொன்னதை செய்வாரா முதலமைச்சர்? நக்கலாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!

0
63

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்றெல்லாம் தெரிவித்து பொதுமக்களை பிரைன் வாஷ் செய்து ஆட்சியை அமர்ந்தவர்கள் சொல்லாததையும் செய்து வருவதை பொது மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள்.

அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சென்னை எம்ஜிஆர் நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்துக் கொண்டு வந்து நின்ற பொதுமக்களில் 42 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள். இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்காலத்தில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் தற்சமயம் ஸ்டாலின் முதல் அமைச்சராக இருக்கிறார் தற்சமயம் பெய்த கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பு குடும்பங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கிறார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் மற்ற கட்சிகளும் பொது மக்களுக்கு அரசு எவ்வளவு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசனை செய்து வருகின்றன என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தற்சமயம் என்ன செய்யப் போகிறார்? எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் இவர் தெரிவித்த அதே ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப் போகிறாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த 2000 ரூபாய் வழங்கப் போகிறாரா? அந்த நிவாரணத் தொகையை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் வழங்கப் போகிறாரா? அல்லது நியாய விலை கடை அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் வழங்க போகிறாரா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதிலும் ஐந்து விதமான குடும்ப அட்டைகளில் அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப் போகிறாரா? இல்லை சொன்னது சொல்லாதது என்று அனைத்தையும் செய்யப் போகிறாரா? என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? என்று இன்னும் சிலர் நக்கலாக கேள்வி எழுப்புகிறார்கள்.