பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற அழகு சார்ந்த பிரச்சனை கரும்புள்ளிகள்.முதலில் பருக்கள் தோன்றி நாளடைவில் அவை கரும் புள்ளிகளாக மாறிவிடுகிறது.இதை மறைய வைக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து ஹோம்மேட் க்ரீம் தயார் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சம் பழம்- ஒன்று
2)தயிர் – ஒரு தேக்கரண்டி
3)தூயத் தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கனிந்த எலுமிச்சம் பழத்தை கத்தியில் கட் செய்து கொள்ளுங்கள்.பிறகு எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு பசுந்தயிரை எலுமிச்சம் சாறு கிண்ணத்தில் சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிடுங்கள்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கவும்.எலுமிச்சை சாறு,தயிர்,தேன் மூன்றும் சேர்ந்து க்ரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்துவிடுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.அடுத்து காட்டன் துணியில் முகத்தை துடைத்துவிட்டு தயாரித்து வைத்துள்ள க்ரீமை முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு உலர விடுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி துடைக்கவும்.இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,கருமை அனைத்தும் நீங்கிவிடும்.
அதேபோல் அரிசி ஊறவைத்த நீரை ப்ரீசரில் ஐஸ்கட்டிகளாக மாறும் வரை வைத்து அதை முகத்தில் வைத்து மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.