தமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!

0
116

தமிழகத்தில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேரவையில் நேற்று தெரிவித்துள்ளார்.ராதாகிருஷ்ணன் பேரவையில் ஆற்றிய உரையில் தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத்துறை துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவமனை கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பில் ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்பட போவதாக கூறினார்.

துணை முதல்வரின் மாவட்டமான தேனி மாவட்டத்தில் வீரபாண்டியில் ரூபாய் 254 கோடி முதலீட்டில் ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி உருவாக இருப்பதாகவும் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி பண்ணை கிணற்றில் ரூபாய் 283 கோடி மதிப்பீட்டில் ஒரு கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

“இது போன்று பல சரித்திர சாதனை படைத்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடுமலைப்பேட்டை தொகுதியில் ஒரு கல்லூரி வழங்கியதற்கு என் சார்பாகவும் எனது தொகுதி மக்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Previous articleவரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!
Next articleதளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா