தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு!
அனைத்து மாநிலங்களிலும் தற்பொழுது தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இன்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பாடங்களை பயின்று வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டு அலார்ட் செய்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தான் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இருப்பினும் மகாராஷ்டிராவில் அகமதுநகர் போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி தான் காணப்படுகிறது. அந்த மாவட்டங்களில் ஒரு நாளைக்கு மட்டும் 200 முதல் 400 பேருக்கு புதிய தொற்று உருவாகி வருகிறது. அவ்வாறு தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டும் ,நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் மைக்ரோ கண்டெண்ட் என ஒரு மண்டலமாக உருவாக்கி அக்டோபர் 23 வரை அப்பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். இப்பகுதிகள் தவிர பாதிப்புகள் குறைந்து காணப்படும் பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல மைக்ரோ கண்டெய்ண்ட் பகுதிகளில் மட்டும் வெளியாட்கள் உள்ளே நுழைவதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் அங்கு நோய் பரிசோதனை ஆய்வகங்கள், மருந்துக்கடைகள், சிறு மருத்துவமனைகள் போன்றவை செயல்படலாம் என்று கூறியுள்ளனர். கடந்த 16ஆம் தேதி தான் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 20ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வித்துறை இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருபதாம் தேதி அடுத்து இரு தினங்கள் சனி மற்றும் ஞாயிறு வருவதால் ,22ஆம் தேதி அன்று உடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையும் வர இருப்பதால் அதற்கு விடுமுறை அளிக்க இருக்கும் பள்ளிகள் விடுமுறை நாளை தற்பொழுது குறைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை கண்டு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.