லைசென்ஸஸ் இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் காடும் காடு சார்ந்த இடமாகும். இதனால் பாம்புகளின் நடமாட்டம் அங்கே அதிகமாக இருக்கும் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் உண்டு.இது ஒருபுறமிக்க பாம்புகளை பிடிப்போர்களின் எண்ணிக்கை அதிகமாகமாகி கொண்டே இருக்கிறது. அதனால் அம்மாநில அரசு இனி பாம்பு பிடிக்க கட்டாயம் லைசன்ஸ் வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் பாம்பு பிடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளது.
இந்த லைசென்ஸ் வேண்டுமென்றால் மாவட்ட வன அலுவலகத்தில் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கலாம். அதற்கு அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வில் பாதுகாப்பான முறையில் பாம்பு பிடிப்பது குறித்து பாம்பு பிடிப்பவர்களுக்கு செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்படும்.
பாதுகாப்பான முறையில் பாம்பு பிடிக்க பயிற்சி பெற்ற 100 வன ஊழியர்கள் கேரள வனத் துறையில் உள்ளனர். அவர்களுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்வோருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி கொடுப்பார்கள். மேலும் லைசென்ஸ் இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என புதிய சட்டம் ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.