பருவ காலத்தில் அனைவரின் சருமமும் அழகாகவும்,மிருதுவாகவும் இருக்கின்றது.ஆனால் வயதாகும் பொழுது இளமை நீங்கி சுருக்கங்கள் தென்படத் தொடங்கிவிடுகிறது.
சருமம் பொலிவற்று போக முக்கிய காரணம் அதை முறையாக பராமரிக்காமல் விடுவது தான்.தொடர்ந்து சருமத்தை பராமரித்து வந்தால் மட்டுமே வயதான பின்னரும் இளமை தோற்றத்துடன் வாழமுடியும்.
30 வயதை எட்டியவர்கள் இனி சரும பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.மிகுந்த கவனத்துடன் சருமத்தை பராமரிக்க வேண்டும்.சிலர் தங்கள் ஸ்கினிற்கு எந்த அழகு சாதன பொருள் செட் ஆகும் என்று தெரியாமல் குழம்புகிக்கின்றனர்.நிபுணர்களின் பரிந்துரைக்கு பிறகு தங்கள் சருமத்திற்கு ஏற்ற பொருட்களை உபயோகப்படுத்துங்கள்.
மேலும் கொலாஜன் பவுடர்,கொலாஜன் மாத்திரையை உட்கொண்டு வந்தால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும்.இதனால் சரும சுருக்கம் உண்டாவது தடுக்கப்படும்.30 வயதை நெருங்குபவர்கள் இதை செய்து வந்தால் வயதாகும் பொழுது அதன் பலனை உணர்வீர்கள்.
தினமும் 3 முதல் 4 முறை நேச்சுரல் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.கெமிக்கல் பொருட்களை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.கற்றாழை ஜெல்,மஞ்சள்,வைட்டமின் ஈ மாத்திரை சரும சுருக்கங்களை கண்ட்ரோல் செய்கிறது.
பழச்சாறு,பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட க்ளென்சர்,மாய்ஸ்சரைசர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.