கொசுக்கடித்தால் காய்ச்சல், டெங்கு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் வரும் என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கொசுக்கடித்ததால் இளைஞர் ஒருவருக்கு 30 அறுவை சிகிச்சை செய்ததோடு கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியில் வசித்து வருவபவர் செபாஸ்டியன் ரோட்ஸ்சேக். இவர் கொசுக்கடியால் கோமாநிலைக்கு சென்றுள்ளார். அவரை ஏசியன் டைகர் என்ற கொசு கடித்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
ஒரு கட்டத்தில் அவரின் ரத்தம் நச்சானதோடு கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அவரின் தொடையில் உருவான கட்டிகளால் அவருக்கு தோல் அறுவைசிகிச்சை உள்ளிட்ட 30 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் தெரிவித்தாவது, செபாஸ்டியன் ” நான் வெளியில் எங்கும் செல்லவில்லை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. படுத்த படுக்கையானேன். பாத்ரூம் கூட போகமுடியாமல் போனது மேலும், படுத்தபடுக்கையானேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு என்னுடைய கால் விரல்கள் எடுக்கப்பட்டது.
கொசுகடித்ததன் விளைவாக பல கட்ட மருத்துவ சிகிச்சை செய்ததோடு உயிருக்கு போராடி உயிர் பிழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.