ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு 30% வரி
பட்ஜெட் 2023-24 க்கான தாக்கல் அறிவிப்பின்படி ஆன்லைன் விளையாட்டுகளில் ஈட்டப்படும் வருமானத்திற்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும் என உத்தரவு வந்துள்ளது. இந்த அறிவிப்பினை தி டயலாக் நிறுவனத்தின் தலைமை பணியாளர் ஆதரவளித்துள்ளார்.
இந்த பட்ஜெட் ஆன்லைன் விளையாட்டால் ஈட்டப்படும் வருமானம் ஆண்டிற்கு 10000 தாண்டி இருந்தால் அதற்கு 30% வரி பிடித்தம் செய்யப்படும். இந்த அறிவிப்பு மே 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படஉள்ளது.
இதனால் குறைந்த பட்சத்தில் முதலீடு செய்து விளையாடும் ஆர்வலர்கள் குறைவார்கள் என்று தெரிய வருகிறது. மற்றும் தற்கொலை முயற்சிகளும் தவிர்க்கப்படும். கடந்த பத்து ஆண்டுகளில் ஆன்லைன் ரம்மி அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனால் பலரும் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளை பயன்படுத்தி கையில் இருக்கும் குறைந்த பணத்தை வைத்து விளையாடி வருகின்றனர். பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தோடு பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் விளையாடி வருகின்றனர். எனவே ஈட்டபடும் வருமானத்தில் விதிமுறை அமைக்கப்பட்டதால் இதிலிருந்து பலபேர் மீள்வதற்கு சரியாக இருக்கும் என கருதப்படுகிறது.