அட்ரா சக்க வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

Photo of author

By Parthipan K

அட்ரா சக்க வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தலுக்கான தேதியை அறிவிக்காத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலையை இப்போதே தொடக்கி விட்டன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேர்தல் வாக்குறுதிகளையும் அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதியாக எங்கள் கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்ககப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.  மேலும் விவசாயிகளுக்கு விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.