ஒரு மாதத்தில் 3000 ரூபாய்! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? 

 

தமிழக அரசு தற்பொழுது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அதன்மூலமாக உதவித் தொகை வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது 3 நலத்திட்டங்கள் மூலமாக 3000 ரூபாய் பெறுவது எப்படி யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

திட்டம் 1:

திமுக கட்சியானது கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2023ம் ஆண்டு சொப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதன் மூலமாக தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் தற்பொழுது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணபித்து ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

 அதன்படி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 2.30 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு இந்த மாதம் 14ம் தேதி அவர்களுடைய வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இரண்டாவது திட்டம்:

தமிழக அரசு மாணவிகளுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது புதுமைப் பெண் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. உங்கள் வீட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் இருந்தால் புதுமை பெண் திட்டத்தின் கீழ் இந்த 1000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதாவது கடந்த பட்ஜெட்டில் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி என்று மாற்றி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் திருமணம் ஆகப்போகும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை ஆகியவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக தற்போது 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.

மூன்றாவது திட்டம் :

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் போலவே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் செயல்படுத்தி வைத்தார். தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். அதன்படி தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முதல் தவணை 1000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் இந்த மாதம் 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.