கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!!

அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம்.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நேற்று மாலை வரை 301466 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 246295மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர்ந்தால் மாதம் தரும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு 25ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.இதனைத் தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி முதல் 20 ந் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.