நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதுவும் தீபாவளி பண்டிகை முன்தினம் முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதை தவிர தீ விபத்து இல்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தீ விபத்து சென்ற ஆண்டு 474 இருந்தது. ஆனால் இந்த வருடம் குறைந்துள்ளது. மேலும் பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்றும், நேற்றிரவு 9 மணி நிலவரப்படி பட்டாசு விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.