ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றானது எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சென்னையில் கொரோனாவிற்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. இன்று மட்டும் இந்த மருத்துவமனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 பேர் மருத்துவர்களாம். பிறர் முதல் நிலை, இரண்டாம் நிலை செவிலியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் மட்டுமல்லாமல் நந்தம்பாக்கம், ஸ்டான்லி என மற்ற கொரோனா தடுப்பு மையங்களிலும் வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை மருத்துவர்கள் செவிலியர் என பலருக்கு கொரோனா தொற்று வந்திருந்தாலும், 31 பேர் பாதிப்படைந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.