இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

0
179

இவர்களுக்கு ரூ.1 லட்சம் தரப்படும்:!! சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பெடரல் வங்கியில்,பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டன.
அதாவது வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் புகுந்த மூன்று முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 32 கிலோ எடை உள்ள தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த வங்கியில் வேலை செய்பவரே கொல்லைக்கு உடந்தையாக இருந்தது அம்பலமான நிலையில்,கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வட மாவட்டங்களான திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளையும் மற்றும் அதன் சுங்கச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணிக்க அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

Previous articleகேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்
Next articleமண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!